தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, அக். 18:  அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை வகித்தார். நிர்வாகி சிவராம் முன்னிலை வகித்தார். இதில்  அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய   அரசுக்கு   தாரை வார்க்கும் மாநில அரசை கண்டித்து  கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் செல்வின், அஸ்வின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: