கொரோனாவுக்கு 380 பேர் பலி தொற்று 25 ஆயிரத்தை எட்டியது

சேலம், அக். 16:சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 24,788 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 3 நாளில் மட்டும் 750க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் தினசரி அதிகரிக்கிறது. இதுவரை 380பேர் கொரோனாவிற்கு இறந்துள்ளனர்.  மருத்துவமனைகளில் இதுவரை 21,814 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 2200 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோக வீட்டு கண்காணிப்பில் இருந்து 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3.95 லட்சம் பேருக்கு சளிதடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 5ஆயிரம் பேருக்கு இப்பரிசோதனை நடத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>