உபி முதல்வர் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு இன்று விடுமுறை எதிரொலி டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்

கரூர், அக். 2: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வழக்கம் போல கடைகளின் முன்பு சமூக இடைவெளியின்றி குடிமகன்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்டோபர் 2ம் தேதி(இன்று) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று கடைகள் மூடப்பட உள்ளன. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகவும், காந்தி ஜெயந்தி நாளன்று பயன்படுத்தும் வகையிலும் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஏராளமான குடிமகன்கள் வழக்கத்தை விட அதிகளவு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கடைக்கு வந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறை டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையிலும் பின்பற்றப்படாமல் உள்ளது. இதன் காரணமாகவும் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. எனவே சம்பந்த்பபட்ட அதிகாரிகள் லாபத்தை மட்டும் பார்க்காமல் அனைவரின் நலனையும் கவனத்தில் கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: