ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க புதிய அலுவலகம்

ஜோலார்பேட்டை, செப்.30: திருப்பத்தூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்கம் மற்றும் தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்கம் சங்கம் இணைப்பு மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சங்க தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். பொது செயலாளர் கலைச்சுடர்மணி சிவகுமார், இணை செயலாளர் துரை சந்தோசு, துணை பொதுச்செயலாளர் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் கே. சி.வீரமணி கலந்துகொண்டு நல சங்க அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் விசிக மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் சக்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற கலைஞரின் மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மறந்து போன சேவையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நடனமாடியும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Related Stories:

>