வரத்து குறைந்ததால் வாழை இலைக்கட்டு ரூ.1200க்கு விற்பனை

பொள்ளாச்சி,ஆக.22:  பொள்ளாச்சி  மார்க்கெட்டுக்கு  சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி பழனி,  ஒட்டன்சத்திரம், தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து விவசாயிகள்  வாழைத்தார் மற்றும் இலைக்கட்டுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.கடந்த மாதம் துவக்கத்தில் வாழை இலைக்கட்டு வரத்து வழக்கத்தை விட  அதிகமாக இருந்தது. ஆனால் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் விஷேச நாட்கள்  குறைவால், அந்நேரத்தில் 100 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ.600க்கும் குறைவான  விலைக்கு ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.  இந்த வாரத்தில் நேற்று  நடந்த  ஏல நாளில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழை இலைக்கட்டுகள்  குறைவான எண்ணிக்கையிலே வரபெற்றது.ஆனால், நாளை விநாயகர் சதுர்த்தி  மற்றும் அடுத்தடுத்த  சுபமுகூர்த்த நாட்கள்  என்பதால், தேர்நிலை  மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாழை இலைக் கட்டுக்கு அதிக கிராக்கி  ஏற்பட்டது. ஒரு இலைக்கட்டு ரூ.900 முதல் அதிகபட்சமாக ரூ.1200 வரை விலை போனது  என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>