கோவை கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

 

கோவை, மே 7: கோவை எழுச்சி கரங்கள் அறக்கட்டளை மக்கள் எழுச்சி பேரவையின் தலைவர் மாலதி, பொருளாளர் சிவபாலன் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இந்த மனுவில், மதுக்கரை ரோடு அறிஞர் அண்ணா காலனி பகுதியில் பாரம் ஏற்றும் ஆட்டோ கடந்த மாதம் 25ம் தேதி சென்றது. ஓட்டுனர் கவனக்குறைவாக ஆட்டோ ஓட்டியதில் 6 மாத குட்டி நாய் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்தினார். இதில், குட்டி நாய் இடுப்பு பகுதி உடைந்தும், இடது முன்னங்கால் உடைந்தும் ரத்தம் வந்தது. வலியால் துடித்த நாய் குட்டியை அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம்.

டாக்டர்கள் கோவை மாவட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதற்கான வசதி இல்லை என்பதால் உடுமலைபேட்டைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க கூறினார். நாய்குட்டியை காப்பாற்ற எண்ணம் இருந்தும், உரிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால் அதனை செய்ய முடியவில்லை. எனவே, கோவை கால்நடை மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சை வசதி அளிக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். கவன குறைவாக வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கோவை கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: