வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி

 

கோவை, மே 3: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தேனி வளர்ப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான பயிற்சி வரும் 6ம் தேதி நடக்கிறது. இதில், தேனீ இனங்களை கண்டறிந்து வளர்த்தல். பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி நாளில் காலை 9 மணிக்கு வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில் அடையாள சான்றினை காண்பித்து பயிற்சி கட்டணமாக ரூ.590 செலுத்தி பயிற்சி பெறலாம். பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கூடுதல் விரவங்களுக்கு பூச்சியியல் துறை தலைவரை 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: