பெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது

கோவை, மார்ச் 20:  கோவையில் பெண்களிடம் நகை பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் கோவை பெரிய கடை வீதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆணையும், பெண்ணையும் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  மங்கலம் ரோட்டில் உள்ள அரசங்காட்டை சேர்ந்த கார்த்தி(34), இவரது மனைவி  ஜோதி(34) என்பது தெரியவந்தது. ேமலும் அவர்கள் துடியலூர் சேரன் காலனியை சேர்ந்த கோமளவள்ளி(74), சுந்தராபுரம் உமா மகேஸ்வரி(48) ஆகியோரிடம் கோனியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது தலா 3 பவுன் என 6 பவுனும், ரத்தினபுரி சாந்தா(52) என்ற பெண்ணிடம் உக்கடம் பஸ் நிலையத்தில் வைத்து 3 பவுனும் என மொத்தம் 9 பவுன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>