பவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு

பவானி, மார்ச் 20:  பவானி நகரம் மற்றும் வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை, முன்னேற்பாடு குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பவானி நகர பகுதிகளில் மருத்துவமனைகளில் பவானி தாசில்தார் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கொரானோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கைகளைக் கிருமிநாசினி கொண்டு கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். சளி, காய்ச்சல், இருமலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு குறித்தும் சோதனை செய்யப்பட்டது. பவானி அசோக் கிருஷ்ணா, லோகநாதன், பிஜிஆர், ஆதித்யா, கவின் மற்றும் சுகந்தி சித்த மருத்துமனைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Stories:

>