கொரோனா பாதிப்பால் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ரத்து

ஈரோடு, மார்ச் 20: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரோட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் உள்ளிட்ட முக்கிய கோயில்களின் திருவிழாக்களை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல், பவானி சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடீஸ்வரர் கோயில்களில் பரிகாரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஈரோட்டில் முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி ரங்கநாதர், மகிமாலீஸ்வரர் கோயில்களில் நடக்கும் சனிப்பிரதோசம் மற்றும் அனைத்து சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளும் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் மறு உத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும் என்றும் கோயில் செயல் அலுவலர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>