வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்

வேலூர், மார்ச் 20: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஒன்று கூடும் மக்கள் குறைதீர்வு கூட்டம் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தினமும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அதிகாரிகள் மனுக்களை பெற முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களுக்காக நுழைவாயிலில் பெரிய பெட்டி நேற்று வைக்கப்பட்டது. குறைகள், கோரிக்கை மனுக்களை கொண்டு வரும் பொதுமக்கள் இந்த பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>