பொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்

பொன்னை, மார்ச் 20: பொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள் நேற்று வழங்கப்பட்டது.  காட்பாடி ஒன்றியம் பொன்னை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இத்திட்டத்தில் பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 40 மகளிர் தேர்வுசெய்யப்பட்டு, தலா 50 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. இதனை பொன்னை அரசு கால்நடை உதவி மருத்துவர் கே.பிருந்தா பயனாளிகளுக்கு வழங்கினார். கேப்சன்.. பொன்னை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 40 பயனாளிக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>