தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தூத்துக்குடி, மார்ச் 19: பிரபல கஞ்சா வியாபாரி குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு அருகேயுள்ள புல்தோட்டத்தைச் சேர்ந்த ஜெபஸ்டின் மகன் ரூபன்ஸ்(35). இவர் மீது போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் தென்பாகம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி அருண்பாலகோபாலன், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார், ரூபன்சை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை மதுரை மத்திய சிறையில் வழங்கினர்.

Advertising
Advertising

Related Stories: