காடையாம்பட்டி அருகே மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

காடையாம்பட்டி, மார்ச் 19: காடையாம்பட்டியில் சந்து கடைகளில் அனுமதியின்றி நடைபெறும் மது விற்பனையை தடை செய்யக்கோரி, பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர். காடையாம்பட்டி தாலுகாவில் காடையாம்பட்டி, டேனிஸ்பேட்டை, கே.மோரூர், சுமைதாங்கி உள்ளிட்ட இடங்களில் 5 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. காடையாம்பட்டி தாலுகாவில் 17 ஊராட்சிகளிலும், ஆங்காங்கே சட்டவிரோதமாக சந்து கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 8க்கும் மேற்பட்ட சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகாலை முதலே குடிமகன்களும் மதுவை வாங்கி குடித்து வருகின்றனர். சட்டவிரோத மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என கஞ்சநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ராஜேந்திரனிடம் நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories:

>