இடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, மார்ச் 19: இடைப்பாடி புதன்சந்தையில், 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனையானது. கொரோன வைரஸ் பீதியால் கோழிகள் வரத்து விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது. இடைப்பாடி புதன்சந்தைக்கு நேற்று, பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து 105 டன் காய்கறிகள் வந்தன. கொரோனா வைரஸ் பீதியால் 600 கோழிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. காய்கறிகளில் சின்னவெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30க்கும், உருளை கிழங்கு ஒரு கிலோ 20 முதல் 26க்கும், பீன்ஸ் 30 முதல் 35க்கும், பீட்ரூட் 20க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 35க்கும், வெண்டை ஒரு கிலோ 10 முதல் 15க்கும், 28 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 140 முதல் 200க்கும், தர்பூசணி ஒரு பழம் 10 முதல் 100க்கும், பானை 60 முதல் 250 வரை என விற்பனை செய்யப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் பீதியால் கோழிகள் விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது. நேற்று மட்டும் 105 டன் காய்கறிகள், கோழிகள் உட்பட 38 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Related Stories:

>