குஜிலியம்பாறை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து

குஜிலியம்பாறை, மார்ச் 18: குஜிலியம்பாறை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றியதில் வைக்கோல் எரிந்து நாசமானது.

திருவாரூரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(45). இவர் சொந்தமாக லாரி வைத்து, வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். திருவாரூரில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு நேற்று குஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி கட்டமநாயக்கனூரில் வைக்கோல் விற்க சென்றார். கட்டமநாயக்கனூர் சாலையை கடக்க முயன்றபோது, மின்கம்பியில் வைக்கோல் உரசியதில் தீ பற்றியது. உடனடியாக லாரியை ஓரம் கட்டி நிறுத்தினர்.
Advertising
Advertising

பின்னர் அங்கிருந்த மக்கள் ஒன்று சேர்ந்து வைக்கோலை கீழே தள்ளிவிட்டனர். இருந்தபோதும் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது.

இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் பிரகாஷ்(பொ) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் லாரியில் இருந்த பாதி வைக்கோல் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றதால், தீ பிடிக்காமல் லாரி தப்பியது.

Related Stories: