திருச்சி, மார்ச் 17: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மக்கள்குறைதீர்க்கும்நாள் மனு பெட்டியில், வடக்குதாராநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை மனு செலுத்தினர். அந்த மனுவில் தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி தரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு வசதியாக மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது
