நெல் மூட்டைகளுடன் லாரிகள் காத்திருப்பு

 

நாகப்பட்டினம், மார்ச்17: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்ய நாகப்பட்டினம் மாவட்டத்தில் 174 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரசு குடோன்கள், தற்காலிக சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: