மாநகர், புறநகரில் பதட்டத்தை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

கோவை, மார்ச் 17: கோவை நகர், புறநகரில் பதட்ட நிலை இருக்கிறது. இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் மோதல், வாகனங்கள் மீது கல் வீச்சு மற்றும் போராட்ட சம்பவங்கள் தொடர்கிறது. நகரில் பதட்ட நிலையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர போலீஸ் சோதனை, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் 16 செக்போஸ்ட்களில் வாகன தணிக்கை நடக்கிறது. ஓட்டல், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டல், லாட்ஜ்களில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதை தடுக்க கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்டட்டுள்ளது.

இதேபோல் புறநகரில் கண்காணிப்பு பணி நடக்கிறது. மாநில எல்லை செக்போஸ்ட்களான வாளையார், வேலந்தாவளம், மீனாட்சிபுரம், கோபநாரி, ஆனைகட்டி செக்போஸ்ட்களில் போலீசார் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். தினமும் சுமார் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோதல் ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். எந்த பகுதியிலும் மோதலில் ஈடுபடக்கூடாது. எந்த அமைப்புகளையும் விமர்சனம் செய்து கருத்து பதிவு செய்யக்கூடாது. போஸ்டர் ஒட்டக்கூடாது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த கூடாது என போலீசார் எச்சரி–்த்துள்ளனர்.

Related Stories: