கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

ஜெயங்கொண்டம், மார்ச் 17: அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் ஆணையர் அறச்செல்வி தலைமையில் குழுக்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் அனைத்து பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் போக்குவரத்து கழக கிளையில் இருக்கக்கூடிய அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் அதிகமாக கை வைக்கக்கூடிய பேருந்து கைப்பிடிகள், அமரும் இடங்களில் மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் பயணிகளிடம் ஒரு மணி நேரத்துக்கு இருமுறை கைகள், முகங்களை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் ஓட்டுனர் நடத்துனர்களுக்கு முக கவசம் வழங்கி வருகின்றனர். பொது இடங்களை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை இப்பணியானது துவங்கி தினசரி நடைபெற்று வரும் என்று ஆணையர் அறச்செல்வி கூறினார்.

Related Stories: