வலங்கைமானில் 50 கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

வலங்கைமான், மார்ச் 17: வலங்கைமான் ஒன்றியத்திட்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை ஒன்றியக் குழு தலைவர் சங்கர் அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்கினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விளையாட்டு மைதானங்களில் கைப்பந்து மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தேவையான கைப்பந்து, கிரிக்கெட் பேட்டி, கிரிக்கெட் பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், உஷாராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையேற்று தொழுவூர் ஊராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வியிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் இளவரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் புகழேந்தி, முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: