எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி

 

முத்துப்பேட்டை, மே 4: எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. விவசாயிகள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கால்நடை டாக்டர் மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை நலன் மற்றும் நோய்தடுப்பு சட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஹமீது அலி, மன்னார்குடி கோட்ட இணை இயக்குநர் டாக்டர் ஆறுமுகம் ஆகியோர் உத்தரவின்பேரில் ஆடுக்கொல்லி நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த எடையூர், வங்கநகர், தொண்டியக்காடு, ஆகிய கிராமங்களில் 800க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு எதிரான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவில் உதயமார்த்தாண்டபுரம் கால்நடை டாக்டர் செல்வகுமார், இடும்பாவனம் கால்நடை மகேந்திரன், வேப்பஞ்சேரி கால்நடை டாக்டர் திவ்யா, ஓதியதூர் கால்நடை டாக்டர் காயத்திரி, கால்நடை ஆய்வாளர்கள் நிர்மலா, ஜெகநாதன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரசன்னா, தமிழ்ச்செல்வி, சத்தியசீலன், மாதவன், வீரமணி, மகாலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் மொத்தம் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இதில் மூன்று மாத வயதுக்கு மேற்பட்ட ஆடுகளுக்கும் சினை ஆடுகளை தவிர்த்து மற்ற ஆடுகளுக்கும் ஆடுக்கொல்லி நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஆடுகள் வளர்க்கும் இப்பகுதி விவசாயிகள் பயனடைந்தனர். இந்த அறிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பொருளாதார இழப்பை ஏற்படுத்தாத வகையில் தங்கள் ஆடுகளை ஆடுக்கொல்லி நோய்களிலிருந்து பாதுக்காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கால்நடை மகேந்திரன் தெரிவித்தார்.

The post எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Related Stories: