சாலையோர கருவேல மரங்கள் அகற்றம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 13:  சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதி, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.  சேத்தியாத்தோப்பு மின்நகர் பகுதி அருகே உள்ள சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரம் கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும் வாகனங்களுக்கு வழிவிட்டு பேருந்துகள் செல்லும் போது பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் மீது கருவேல மரக்கிளைகள் பட்டு, காயம் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் தொடர் விபத்துகளில் சிக்கி வந்த நிலையில் இதனை சுட்டி காட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் போக்குவரத்து இடையூறாக சாலையோரம் உள்ள கருவேல மரங்களை விரைந்து அகற்றும் படி நகாய் திட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று நகாய் திட்ட

அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். 

Related Stories: