பாஜக நிர்வாகிகள் தேர்வு

பொன்னமராவதி, மார்ச் 13: பொன்னமராவதி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொன்னமராவதி வடக்கு ஒன்றிய பாஜக தலைவராக சேது தேர்வு செய்யப்பட்டுள்ளார். காரையூரில் வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்டத் தலைவர் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றியத் தலைவராக சேது மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொன்னமராவதி தெற்கு ஒன்றிய தலைவராக ஏற்கனவே சேதுமலையாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: