புதுக்கோட்டை மாநகராட்சியுடன் முள்ளூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

புதுக்கோட்டை, மே 1: புதுக்கோட்டையில் மாநகராட்சியுடன் முள்ளூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முள்ளூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கடந்த மாதம் புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. இதில் முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயர் சமுத்திரம், 9ஏ நத்தம் பண்ணை, தேக்காட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post புதுக்கோட்டை மாநகராட்சியுடன் முள்ளூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: