இலுப்பூரில் பதுக்கல் ஆற்று மணல் பறிமுதல்

 

விராலிமலை.ஏப்.24: இலுப்பூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணல், வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இலுப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் மற்றும் குளத்துப் பகுதிகளில் ஆற்று மணல், சரளை மணல் சிலர் சட்ட விரோதமாக பொக்லேன் உள்ளிட்ட வாகனங்களில் அள்ளப்பட்டு டிராக்டர், லாரி, டிப்பர் உள்ளிட்ட வாகனங்களில் அனுமதியின்றி அள்ளி அதிக விலைக்கு விற்று வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து இலுப்பூர் தாசில்தார் தலைமையிலான அலுவலர்கள் சூரிய பிரபு தலைமையிலான வருவாய்த்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஆற்று மணலை குவித்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற தாசில்தார் சூரிய பிரபு அனுமதியின்றி குறித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.

The post இலுப்பூரில் பதுக்கல் ஆற்று மணல் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: