கலெக்டர் நேரில் ஆய்வு பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி மீட்பு

பொன்னமராவதி, மார்ச் 12: பொன்னமராவதி அருகே 60அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டியினை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுந்தர சோழபுரம் என்ற கிராமத்தில் சுமார் 60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் புள்ளிமான் குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மீட்ககோரி பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மான் விழுந்த கிணறுக்கு சென்று பார்வையிட்டனர். பணியாளர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர் சதீஷ்குமார் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மான் குட்டியை உயிருடன் மீட்டு வந்தார். இதன் பின்னர் வனத் துறை வனக்காவலர்கள் கருப்பையா மற்றும் மகாலிங்கத்திடம் நல்ல நிலையில் உயிருடன் மான்

ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: