மழவராயநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிசிடிவி கேமரா

சேத்தியாத்தோப்பு, மார்ச் 12:  சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் சிசிடிவி கேமரா திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் பிருந்தாவதி வரதராஜன் தலைமை தாங்கினார். வரதன், வெற்றிவேந்தன், ஜெகஜீவன்ராம், வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, சங்கர், பிரபு, முருகன், மேனகாசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணைத் தலைவர் வசந்தி இளங்கோவன் வரவேற்றார். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ஜவகர்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிசிடிவி கேமரா பதிவுகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, ஒன்றிய தலைவர் லதாஜெகஜீவன்ராம், பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, பொறியாளர் ரத்தினகுமார், கங்கை அமரன் உள்ளிட்டோர் பேசினர். மழவராயநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளி நுழைவாயில், பள்ளி வளாகம், வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் எஸ்ஐ மாயச்சந்திரன், எஸ்ஐ வேலாயுதம், கோபி, செல்வக்குமார் மற்றும் சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, எஸ்பியின் தனிப்பிரிவு காவலர் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: