பேராவூரணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பேராவூரணி, மார்ச் 11: பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம், பேராவூரணி வட்டார வளமையம் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் குறு வளமைய அளவிலான பயிற்சி வகுப்பு நடந்தது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுணா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வேம்பையன் துவக்கி வைத்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சித்ரா பயிற்சி அளித்தார்.இதில் அரசு பள்ளி வளர்ச்சி, பள்ளி தேவை குறித்து திட்ட அறிக்கை தயாரித்தல், 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றல் இல்லாமல் கண்காணித்தல் ஆகியவை குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories: