முன்னேற்பாடு பணிகள் மும்முரம் அரங்ககுடி குளத்தை தூர்வாரும் போது சவுடு மண்எடுக்க அனுமதிக்க வேண்டும்

தரங்கம்பாடி, மார்ச் 6: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே அரங்ககுடியில் உள்ள குளத்தை தூர்வாரும்போது சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரங்ககுடியில் உள்ள குளத்தை தூர்வாரி குளத்தில் உள்ள வண்டல் மற்றும் சவுடு மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள தரங்கம்பாடி தாசில்தார் கடந்த செப்டம்பர் மாதம் 3 நாட்களில் குளம் வெட்டப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தார். முதல் நாள் குளத்தை தூர்வாரும் பணி நடந்தது. மறுநாள் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து குளம் தண்ணீரால் நிரம்பிவிட்டது.

இதனால் குளம் தூர்வாரும் பணி நின்றுவிட்டது. இப்போது குளத்தில் நீர்வற்றி விட்டதால் மீண்டும் வண்டல் மற்றும் சவுடு மண்ணை எடுத்து தூர்வார அனுமதி அளிக்க வேண்டும். இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் அந்த நிலங்களுக்கு வண்டல் மண் தேவைப்படுகிறது. எனவே தாசில்தார் அந்த குளத்தை மீண்டும் தூர்வாரி வண்டல் மற்றும் சவுடு மண்ணை எடுத்துக்கொள்ள ஆணை வழங்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: