சீர்காழி, ஏப்.23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணி கிராமம் மேலத்தெருவில் எழந்தருளி அருள்பாலித்து வரும் உத்திராபதியார் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள், பொதுமக்கள், கிராம வாசிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.