கரூர் வெங்கமேடு காமதேனு நகரில் குண்டும் குழியுமான மண் சாலையால் மக்கள் அவதி

கரூர், மார்ச். 6: வெங்கமேடு காமதேனு நகர்ப்பகுதி சாலையை தார்ச்சாலையாக்க வேண்டும என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கமேடு அரசு காலனி பகுதிகளை இணைக்கும் சாலையாக காமதேனு நகர்ச்சாலை உள்ளது. இந்த சாலையில் விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளதோடு, தனியார் நர்சரி பள்ளியும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, இந்த சாலை குறுகிய நிலையில் குண்டும் குழியுமாகவே உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையின் வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. இந்த சாலையை தரம் உயர்த்தி தார்ச்சாலையாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது.

எனவே, அனைத்து தரப்பினர்களின் கோரிக்கையின் படி, அரசு காலனி வெங்கமேடு சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: