வேலூர் டிஐஜி அலுவலக வளாகத்தில் 3.75 கோடியில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்பு திறப்பு விழா எப்போது?

வேலூர், மார்ச் 6:வேலூர் டிஐஜி அலுவலக வளாகத்தில் ₹3.75 கோடியில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதாக போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் வெளியூரை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் தங்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்தை ஒட்டியும், இன்பென்டரி சாலை, கஸ்பா, வசந்தபுரம், டோல்கேட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இதுதவிர டிஎஸ்பி முகாம் அலுவலகம் பின்புறமும் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த நிலையில் 24 காவலர் குடியிருப்புகள் ₹3 ேகாடியே 75 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள டிஐஜி அலுவலக வளாகத்தில் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.. கட்டுமான பணிகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் ேததிக்குள் முடிக்க வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் காலம் 3 மாதம் கடந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. பணிகள் முடிந்தும் இன்றும் குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, முதல்வரின் தேதி கிடைக்கவில்லை. கிடைத்ததும் திறக்கப்பட்டு எஸ்ஐக்களுக்கு குடியிருப்பு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தன.

Related Stories: