பெரம்பலூர் அருகே நிலமோசடி செய்து அண்ணனின் சொத்தை அபகரிக்க முயற்சி

பெரம்பலூர், மார்ச் 5: பெரம்பலூர் அருகே அண்ணனின் சொத்தை நிலமோசடி செய்து அடமானமாக எழுதிக்கொடுத்து கடன் வாங்கியதோடு நிலத்தை அபகரிக்க முயலும் தம்பி மீது நடவடிக்கை எடுக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது சொத்துக்களை இவரது மகன்கள் சின்னசாமி, பெருமாள், ரெங்கராஜி ஆகிய மூவரும் பாகம் பிரித்து அனுபவித்து வருகின்றனர். சின்னசாமியின் சொத்துக்கள் அவரது மகன் ராமச்சந்திரன் பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி ராமச்சந்திரன் இறந்து விட்டார்.

இந்நிலையில் நக்கசேலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெருமாள் அவரது சொத்துக்களையும், அவரது அண்ணன் மகன் ராமச்சந்திரனின் சொத்தையும் சேர்த்து நிலமோசடி செய்து அடமானம் வைத்து கடன் பெற்று ள்ளார். தற்போது வில்லங்கம் எடுத்து பார்த்தபோது ராமச்சந்திரன் நிலத்தை மோசடியாக அடமானம் வைத்து பெருமாள் கடன் பெற்றுள்ளதும், வில்லங்கம் இருந்ததை மறைத்து நக்கசேலம் சார்பதிவாளரும் கூட்டு சதி செய்து பத்திரம் பதிவுசெய்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து கேட்டதற்கு பெருமாள் ராமச்சந்திரனின் குடும்பத்தினரை தகாத வார்த்தையால் திட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அடியாட்கள் மூலம் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளராம். இதனால் எங்களது சொத்துக்களை திட்டமிட்டு நில மோசடி செய்து அபகரிக்க நூதனமுறையில் வில்லங்கத்தை மறைந்து கூட்டு சேர்ந்து சதியில் ஈடுப்பட்ட பெருமாள் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமச்சந்திர னின் தாய் ஆதிலட்சுமி கொடுத்தப் புகாரின்பேரில் பெரம்பலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: