தேசிய செவித்திறன் விழிப்புணர்வு தினவிழா

ஒரத்தநாடு, மார்ச் 4: ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் தேசிய செவித்திறன் விழிப்புணர்வு தினவிழா நடந்தது. காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ நிபுணர் அனுஜா முன்னிலை வகித்தார். தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் தலைமை வகித்து பேசுகையில், செவித்திறன் குறைபாட்டின் தாக்கம் இந்தியாவில் 6.3 சதவீதம் உள்ளது. மரபணு காரணங்கள், குழந்தை பிறப்பின்போது ஏற்படும் பிரச்னை, தொற்று நோய்கள், சில மருந்துகளின் தாக்கங்கள், அதிக ஒலி, முதுமையால் அதிகளவு செவித்திறன் பாதிப்படைகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் மட்டுமே அதை குணப்படுத்த முடியும் என்றார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ஆகியோர் செவித்திறன் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Related Stories: