கோமாபுரத்தில் பயனற்ற அரசு பள்ளிகட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

கந்தா–்வகோட்டை, மார்ச்4: கந்தர்வகோட்டை அருகே கோமாபுரத்தில் உள்ள அரசினா் உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் மூன்று வகுப்பறை கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் பயனற்று உள்ளது. எனவே இதை இடித்து அப்புறப்படுத்தி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்தா–்வகோட்டை அருகேயுள்ள கோமாபுரம் அரசினா–்உயா–்நிலைப்பள்ளி வருடந்தோறும் மாணவா–்கள் தோ்ச்சி விகிதத்தில் முன்னேறி வருகிறது. கடந்த வருடம் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.

இப்பள்ளியில் தற்போது விளையாட்டு திடலை சாிசெய்ய தனியார் அமைப்புகளின் ஸ்பான்சாில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள வகுப்பறை கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. ஸ்மார்ட் கிளாஸ்கள் பள்ளி வளாகத்தில் தூரமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. மாரிஅய்யா சட்டமன்ற உறுப்பினராக 1997ல் இருந்தபோது கட்டிதரப்பட்ட மூன்று வகுப்பறை கட்டிடம் தற்போது சேதமடைந்து பயனற்று உள்ளது. எனவே பயனற்று உள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வகுப்பறைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க கோக்கை எழுந்துள்ளது. அதே போல் கஜா புயல்போது பள்ளி சுற்றுசுவா் முன்பக்கம் இடிந்து விழுந்தது. அவற்றையும் சாிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: