காரைக்கால் அரசு பெண்கள் கல்லூரியில் மகளிர் பிரச்னைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால், மார்ச் 4: காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், மகளிர் பிரச்னைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட பெற்றோர் சங்கம், அன்னை தெரசா சமூக சேவை இயக்கம், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மகளிர் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து, கல்லூரி வளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலாஜி தலைமை வகித்து, கல்லூரியின் செயல்பாடுகளும், மாணவிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார். கல்லூரி மகளிர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை அனந்தநாயகி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பெற்றோர் சங்க தலைவர் சோழசிங்கராயர், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், மாணவர்களின் வரவேற்பு குறித்தும் பேசினார். பெற்றோர் சங்க செயலர் செல்வமணி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில், கல்லூரியில் வரலாறு பிரிவில் தங்கம் வென்ற பிரியங்கா, இளங்கலை ஆங்கில பிரிவில் தங்க பதக்கம் வென்ற ஜெனிபர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடந்த போட்டிகளில் ஒட்டு மொத்த பரிசுகளை வென்று சாதனை படைத்த இயற்பியல் துறை மாணவிகள் கவுரப்படுத்தப்பட்டனர். காரைக்காலில் நம்நீர் திட்டம் மூலமாக உயரிய விருது பெறுவதற்கேற்ற ஆவணப்படம் தயாரித்து கொடுத்த பெற்றோர் சங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அசோக் கவுரவிக்கப்பட்டார்.

Related Stories: