பொன்னமராவதி சிவன் கோயில் அருகில் பழுதான குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

பொன்னமராவதி,மார்ச்3: பொன்னமராவதி சிவன்கோயில் அருகில் இடிந்து விழும் நிலையில் இருந்த குடிநீர் தொட்டி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புகள் தினகரன் செய்தி எதிரொலியால் பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

பொன்னமராவதி-நாட்டுக்கல் சாலையில் சிவன் கோயில உள்ளது. இந்த தெற்குப்புறம் ஒரு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு இல்லாமல் பழுதடைந்து பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த தொட்டி இடிந்து விழுந்தால் சிவன்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மனமகிழ்மன்றத்திற்கு வருபவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படும். இந்த குடிநீர்தொட்டியினை இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கோயிலின் அருகில் பாழடைந்து கிடந்த குடிநீர் தொட்டி மற்றும் பாழடைந்து கிடந்த அலுவலர்கள் குடியிருப்பு ஆகியவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: