ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

தஞ்சை, மார்ச் 2: தலைமை ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினருமான மாலதி பேசுகையில், ஆராய்ச்சியாளர் ராமனுக்கு 1930ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் அவரே. இங்கிலாந்து அரசு 1935ம் ஆண்டு அவருக்கு சர் என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. 1954ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தாம் வாழும் காலத்திலேயே புகழ் பெற்றவர் சர் சி.வி.ராமன் என்றார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்சி.வி.ராமன் முக அமைப்பு கொண்ட முகமூடி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

Related Stories: