மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி காரைக்காலுக்கு நீட்டிக்க வேண்டும்

காரைக்கால், மார்ச் 2: மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடிக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி, காரைக்கால் வரை கொண்டுவர வேண்டும் என, பாஜக நாகை வடக்கு மாவட்ட முன்னாள் பொது செயலாளர் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, நாகை மாவட்டம், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், பாஜக நாகை வடக்கு மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளருமான அமுர்த விஜயகுமார், காரைக்காலுக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பது: கடந்த 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மாணவர்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், 1982 காங்கிரஸ் ஆட்சியின்போது இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் பல பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு நான் தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தபோது இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்திருந்தேன். இது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் ரூ.12 கோடி ஒதுக்கியது. ஆனால் பின்னர் ரயில்வே கவுன்சில் போர்டு தலைவர் பாலுவின் முயற்சியால் இந்த நிதியை நீடாமங்கலம்- மன்னார்குடி இடையே புதிய ரயில்பாதை அமைக்கும் நடவடிக்கைக்காக திருப்பி விடப்பட்டது. எனவே மயிலாடுதுறையிலிருந்து மீண்டும் தரங்கம்பாடிக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி அதனை காரைக்கால் வரை நீட்டிக்க வழிவகை செய்யவேண்டும், வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: