ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா

ராஜபாளையம், மார்ச் 2: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கண்காட்சியில் 244 தொழில்நுட்ப திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இணை பேராசிரியர் கார்த்திகேயன், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர் விமல், சிவகாசி மின்னியல் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் ரகுபதிமுத்து, ஹஷன் மெடிகேர் நிறுவனத்தின் இயக்குநர் போத்திராசன் ஆகியோர் மூன்று சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுத்தனர்.

அவற்றிற்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன. மேலும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதன் பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் விழாவிற்கான புத்தகம் வெளியிடப்பட்டது. மூன்றாம் ஆண்டு மாணவி ஜெயவர்ஷா வரவேற்றார். ராம்கோ கல்லூரியின் முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணைமுதல்வர் ராஜகருணாகரன் பாராட்டி பேசினார். ராம்கோ கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அலுவலர் வெங்கட்ராஜ் திட்டங்களை பார்வையிட்டார். நான்காம் ஆண்டு மாணவி நிவேதா நன்றி கூறினார். அறிவியல் தின விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பசரிகொடி மற்றும் கல்லூரி துணை பொதுமேலாளர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வக பணியாளர்கள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: