விருதுநகர், மார்ச் 13: ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பாலானோர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கான அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமே நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சிப்பது, விலையுயர்ந்த செல்போன் மற்றும் பொருட்கள் ஆன்லைன் மூலம் வாங்குவதற்காக புக்கிங் செய்வது, பணம் இரட்டிப்பாக தருவதாக வரும் விளம்பரங்களில் உள்ள லிங்க் உள்ளிட்டவற்றை கிளிக் செய்தவுடன் ஈமெயில் அனுப்பி அதில் உள்ள மெயில் ஐடிக்கு வங்கி கணக்கு எண் விபரம் கேட்பது, அல்லது குறிப்பிட்ட பணத்தை ஆன்லைனில் சம்பந்தப்பட்டவர் வங்கி கணக்கிற்கு செலுத்தச் சொல்லி மெசேஜ் அனுப்புவது, செல்போனில் தொடர்பு கொண்டு பணம் அனுப்ப சொல்வது என பல்வேறு வகைகளில் பணத்தை பெறுகின்றனர்.
