வில்லிபுத்தூர், மார்ச் 13: மூன்று மாத கால கோடை விவசாயத்திற்கு பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மாவட்டத்திலுள்ள கண்மாய்களிலேயே மிகப்பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாய் மூலம் சுமார் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
