சிவகாசி, மார்ச் 10: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், வேட்லபாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 பட்டாசு தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டாசு ஆலைகளில் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதாகவும், அங்கு சமீப காலமாக விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
