பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதி வழங்க கலெக்டர் நடவடிக்கை

 

சாத்தூர், மார்ச் 14: சாத்தூரில் பட்டாசு விபத்தால் இறந்தவரின் வீட்டிற்கு சென்ற கலெக்டர், ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்தார்.
சாத்தூரில் பல்வேறு ஆய்வு பணிக்காக கலெக்டர் சுகபுத்ரா வருகை தந்தார். சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் ஆய்வு மாளிகையை கலெக்டர் சுகபுத்ரா நேரில் சென்று அங்கு உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பட்டாசு வெடி விபத்தில் இறந்த சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கலா என்பவருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக அவரின் தாயார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி விபரங்களை கேட்டறிந்தார். அவருடன் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வடிவேல், துணை வட்டாட்சியர் மாரியப்பன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: