காரியாபட்டி, மார்ச் 14: காரியாபட்டி அருகே மாசி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
காரியாபட்டி அருகே வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பூர்ணிமா பொற்கொடியாள் சமேத முருகாருடைய அய்யனார் மற்றும் அழகு நாச்சியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருந்து பொங்கல் வைத்தும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வழிபட்டனர். விழாவில் முளைப்பாரி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கரகம், அம்மன், சின்னக்கருப்பு, பெரிய கருப்பு போன்ற சாமி உருவ முளைப்பாரிகள், கன்னி முளைப்பாரிகள் மங்கள வாத்தியம் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.
