பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் மாசிமக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் மாசிமக பெருந்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.அதேபோல் நடப்பாண்டும் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு யாகம் செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

 அப்போது ஹம்ச வாகனத்தில் பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனையடுத்து திருவிழாவில் தேரோட்டம் வரை ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.அதேபோல் நாள்தோறும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: