இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கெங்கவல்லி, பிப்.27: கெங்கவல்லியில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி  நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கு கெங்கவல்லி 2வது வார்டு தொடக்கப்பள்ளியிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வள மையத்திலும் நடைபெற்றது.  இந்த பயிற்சியை கெங்கவல்லி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுஜாதா தொடங்கி  வைத்தார். கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணி முத்து ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

சேலம் டயட் விரிவுரையாளர் கலைவாணன், மாணவர்களின்  பொதுஅறிவு திறனை வளர்க்க தேவையான ஆலோசனை வழங்கி, அதற்கான வினாத்தாள்  தொகுப்புகளை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை பொது அறிவுத்திறன் பெறச்செய்ய  வேண்டும் என்றார். தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பன்னீர் செல்வம், செல்வராசும், வட்டார வள மையத்தில் சுப்ரமணியன், முருகேசன் ஆகியோரும் பயிற்சியை நடத்தினர்.

Related Stories: