அரசு அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 3 லாரிகள் பறிமுதல் 3 டிரைவர்கள் கைது

மயிலாடுதுறை,பிப்.26: அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் விடிய விடிய திடல் மணல் லாரிகளில் வக்காரமாரி, முட்டம் பாலம் வழியாக சென்று கடலூர், திருவண்ணாமலை, சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் நாகை மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிரியா தலைமையில் நேற்று மயிலாடுதுறை மணல்மேடு பகுதியை அடுத்த வக்காரமாரி என்ற இடத்தில் வாகன சோதனை செய்தபோது தார்பாய் மூடிய நிலையில் சென்ற மூன்று லாரிகளை நிறுத்தி பரிசோதனை செய்ததில், அதில் அரசு அனுமதியின்றி திடல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, விசாரித்ததில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகில் நீலத்தநல்லூரில் உள்ள அரசு அனுமதியின்றி இயங்கும் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வருவதாகவும் தெரிவித்தனர். மூன்று லாரிகளை பறிமுதல் செய்தும் லாரி டிரைவர்கள் திருவண்ணாமலை சேர்ந்த ராஜா(42), பழனி(31) ,பாலு (30)ஆகியோரை பிடித்து மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3பேரையும் கைது செய்தனர்.

Related Stories: