அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மயிலாடுதுறை தொகுதியில் 70.06% வாக்குப்பதிவு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

 

சீர்காழி, ஏப்.21: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் புஷ்ப பல்லாக்கில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டைநாத சுவாமி கோயிலில் திருமுலைப்பால் உற்சவம் கடந்த 15ம் தேதி வெகு விமரிசியாக தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் 6ம் நாள் விழாவில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. விழாவை ஒட்டி திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அம்பாளுக்கு சீர்வரிசையை பக்தர்கள் எடுத்து வந்தனர். பின்பு சிவாச்சாரியார்களால் சுவாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

அப்போது சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விஸ்வகர்மா சமூகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புஷ்ப வழக்கில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் கட்டளை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாகி செந்தில் விஸ்வ கர்மா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

 

The post அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மயிலாடுதுறை தொகுதியில் 70.06% வாக்குப்பதிவு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் appeared first on Dinakaran.

Related Stories: